Saturday, June 29, 2013

Ambikapathi (a) Raanjhanna - Worth of Money!!!

அம்பிகாபதி- தனுஷோட முதல் ஹிந்தி படம்,,,  ரஹ்மான் மியூசிக் ...ஆனாலும் டபிங் படம் தானனு நெனச்சோ ஹிந்தில பாத்தா தான்  நல்லா இருக்கும்னு  நெனச்சோ   மிஸ்  பண்ண   வேண்டாம். ஏன்னா படத்துல ஆழமான கதை இருக்கு...அத நல்ல திரைக்கதை மூலமா தெளிவா கொண்டு போயிருக்கார்  நம்ம ஹிந்தி டைரக்டர்.



ஒரு பொண்ணு பின்னாடி போனா எவ்ளோ பெரிய அப்பாடக்கர் ஆனாலும் சீக்கிரம் ஒண்ணும் இல்லாம போய் உயிர விட்ற நிலைமை கூட வரலாம் ..அதே சமயம்  அதே பொண்ணால ஒண்ணுமில்லாத ஒருத்தன எவ்ளோ பெரிய உயரத்துக்கும் போக வைக்க முடியும் அப்டிங்கற நம்ம ரொம்ப பழைய பொன்மொழிய சிறப்பான காட்சி அமைப்புல தேர்ந்த நடிகர்கள வெச்சு வெற்றிகறமா சொல்லிருக்கார் இயக்குனர்.

தனுஷ் பத்தி சொல்லவே வேண்டாம்...நடிப்பு பிரமாதம்...இன்னொரு நேஷனல் அவார்ட் கூட தரலாம்...சோனம் பளிச்சுன்னு வர ஹீரோயின் படம் முழுக்க வராங்க...ஹீரோவோட friend கேரக்டர் குட் ....தனுஷ ஓன்  சைடு லவ் பண்ற பொண்ணு ஓகே....



Triangular லவ் ஸ்டோரி....அதுல  கொஞ்சம் அரசியல்...கடைசில யாரு லவ் ல தோத்தா... யாரு அரசியல்ல ஜெயிச்சா அப்டிங்கறது தான் கதை...

Musicல கொஞ்சம் நார்த் இந்தியன் ஸ்டைல் இருந்தாலும் கதையோட அழகா பயணம் செய்ய வெச்ருகார் இசைப்புயல்...பாடல்கள் தாளம் போட வெக்குது.

First half லயே கதைய fastஆ நகர்த்தி அந்த ஸ்பீட் கொஞ்சம் கூட செகண்ட் ஹால்ப் ல குறையாம பாத்துகுடதால dubbing படங்ரதெ பல இடத்துல மறந்து ரும்...சில எடத்துல கோரஸ் வரும்போது  "இந்த பட போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா " னு போட்டு dubbing னு remind பண்ணிருவாங்க....:)


மொத்ததுல...குடுத்த பணத்துக்கு வொர்தான படம்...பாக்க வேண்டிய படம் !!!!

அம்பிகாபதி -

  • மோசம் 
  • சுமார் 
  • பார்க்கலாம் 
  • சூப்பர்
  • மெகா ஹிட்